ட்ரெண்டிங்

3 மணி நேரத்திற்கு சேலம் உள்பட 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

சேலம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்பட 28 மாவட்டங்களில் இரவு 07.00 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வானிலை நிலவரம் குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கரூர், ஈரோடு, திருப்பத்தூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இன்று (நவ.30) இரவு 07.00 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.