ட்ரெண்டிங்

தீபாவளி பண்டிகை- சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள்! 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக, வரும் அக்.30- ஆம் தேதி முதல் நவ.05-ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. 

பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக முன்பதிவு மையங்களிலும், இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு நடைபெற்று வருகிறது.பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகளும், மாநகர பேருந்துகளும் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.