ட்ரெண்டிங்

சேலத்தில் நாளைய மின்தடை பகுதிகள், விவரம் !!!

 

சேலம் மாவட்டத்தில் உள்ள சில துணை மின் நிலையங்களின் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

அதிகாரிகள் கூறுகையில், 

நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பல்வேறு பகுதிகளில் மின்விநியோகம் இல்லை என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புத்திரகவுண்டன்பாளையம் துணை மின் நிலைய பகுதிக்குட்பட்ட,ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம், அபிநவம், வீரகவுண்டனூர், காந்திநகர், தளவாய்ப்பட்டி, தென்னம்பிள் ளையூர், ஒட்டப்பட்டி, உமையாள்புரம், ஓலப்பாடி, ஆரியப்பாளையம், எருமசமுத்திரம், பெத்தநாயக்கன்பாளையம், சின்னமசமுத்திரம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, படையாச்சியூர், முத்தாக்கவுண்டனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது , என தெரிவித்தனர்.

அதேபோல்,நங்கவள்ளி துணை மின் நிலைய பகுதிக்குட்பட்ட,வனவாசி, செல்லக்கல், பெரிய வனவாசி ஒரு பகுதி, சம்மட்டியூர், கரட்டுப்பட்டி, பழக்காரனூர், குட்டப்பட்டி, மாதநாயக்கன்பட்டி, முத்தாம்பட்டி, எல்லகுட்டையூர், ஏர்வாடி, மானத்தாள், ஓலைப் பட்டி, கங்காணிப்பட்டி, மலையடிப்பட்டி. உட்பட்ட பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.