சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரால் கிராம மக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
ஓமலூருக்கு அருகே உள்ள நச்சுவாயனூர் கிராமத்தில் உள்ள அரசுத் துவக்கப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்குவதால், மரத்தின் இலைகள் உதிர்ந்து அவை அழுகி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, பொது முகாம்கள் அமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில்,ஊராட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்துள்ளார்.


