சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (நவ.06) நடைபெற்று மக்கள் சந்திப்பு திட்ட முகாமில் கலந்து கொண்ட தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். அத்துடன், கணினி மூலம் மனுக்கள் பதிவுச் செய்யப்பட்டு வருவதையும் அமைச்சர் பார்வையிட்டார்.
மேலும், முகாமில் வருவாய்த்துறையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், நத்தம் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டைகள், சமூக பாதுகாப்புத்திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை, உழவர்நலத்துறை, தோட்டக் கலைத்துறை ஆகிய துறைகள் மூலம் 73 பயனாளிகளுக்கு ரூபாய் 59.64 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, தி.மு.க.வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


