ட்ரெண்டிங்

குழப்பம் ஏற்படுத்துவோருக்கு இடமளிக்கக் கூடாது- அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அற

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஆலோசனை மாநாடு தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் மாநாட்டில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முனைவோருக்கு இடமளிக்கக்கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், உள்நோக்கத்தோடு சிலர் அமைதியைக் கெடுக்க செயல்படுவர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவது முதல் இலக்கு.

 

சாலை விபத்துகளால் அதிக மரணம் ஏற்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனையை அறவே தடுத்து நிறுத்த வேண்டும். சென்னை உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சிறப்புத் திட்டம் ஏற்படுத்த வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் சமரசம் இருக்கக் கூடாது.

 

சமூக ஊடகங்களை மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள் தொடர்ந்து கண்காணித்து பொய் செய்திகளைத் தடுக்க வேண்டும்" என அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.