ட்ரெண்டிங்

தேர்தல் பறக்கும் படையினரின் கெடுபிடியால் வெறிச்சோடிய சந்தை!


சேலம் மாவட்டம், ஓமலூர் மாட்டுச்சந்தையில் தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடிகளால் மூன்று கோடி அளவிலே வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

சேலம் பெருமாள்கோவில் மாட்டுச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ் பெற்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவதால் 45% வியாபாரிகளே மாட்டுச்சந்தைக்கு வருகை தந்துள்ளனர்.

வழக்கமாக இந்த சந்தைக்கு வெளியூர்களில் இருந்து சுமார் 2,500 முதல் 4,000 கால்நடைகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில், தற்போது உள்ளூரில் உள்ள வியாபாரிகள், விவசாயிகள் மட்டுமே கால்நடைகளைக் கொண்டு வந்திருந்தனர்.

வாரந்தோறும் ரூபாய் 5 கோடி முதல் ரூபாய் 7 கோடி வரை கால்நடைகள் விற்பனையாகும் நிலையில், இந்த வாரத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மட்டுமே கால்நடைகள் வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் பணத்தை எடுத்து வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.