ட்ரெண்டிங்

மனு கொடுத்த மாணவர்கள்...நிறைவேற்றிய எம்.எல்.ஏ.!

 

சேலம் கே.ஆர்.தோப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ம.க.வின் சேலம் மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான அருளிடம், அந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க கபடி சீருடைகளை தாங்கள் வழங்கி உதவிட வேண்டும் என்று எம்.எல்.ஏ.விடம் மனு அளித்திருந்தனர்.

 

அந்த மனுவை வாங்கிப் படித்த எம்.எல்.ஏ. அருள், மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகளை வழங்க முடிவுச் செய்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று (ஜன.07) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், கபடி போட்டியில் அணிந்து விளையாடும் வகையிலான சீருடையைக் கோரிய மாணவர்களை நேரில் அழைத்த எம்.எல்.ஏ. அருள், ஒவ்வொரு மாணவருக்கும் சீருடை வழங்கினார்.

 

அதனை உடனடியாக அணிந்துக் கொண்ட மாணவர்கள், எம்.எல்.ஏ. அருளுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அத்துடன், நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர். இதற்கு எம்.எல்.ஏ, நன்றாக படிக்கவும் வேண்டும், விளையாடவும் வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.