ஆன்மிகம்

ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குரு பகவான்! 

நவக்கிரகங்களில் ஒருவரான குரு பகவான் இன்று (மே 01) மாலை 05.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்த நிலையில், கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். 

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, பல்வேறு ராசிக்காரர்கள் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களின் அலைமோதும் கூட்டம் காரணமாக, குரு பகவான் கோயில்களில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

குரு பகவான் கோயில்களில் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன.