ட்ரெண்டிங்

582 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை! 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் +2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 01) தொடங்கியது. 

இன்றைய தமிழ் பாடத் தேர்வில் சேலம் மாவட்டத்தில் மொத்தம் 34,857 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், மாணவர்கள் 16,026 பேரும், மாணவிகள் 18,831 பேரும் அடங்குவர். 278 மாணவர்களும், 304 மாணவிகளும் என மொத்தம் 582 பேர் தேர்வு எழுதவில்லை என்று சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே, இன்றைய தேர்வை எழுதாத மாணவ, மாணவிகள் குறித்தும், ஏன் தேர்வை எழுதவில்லை என்பதற்கான காரணங்கள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யவும் அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.