ட்ரெண்டிங்

விலையில்லா இருசக்கர வாகனம் வழங்க மனு பெறும் முகாம்!

மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் முகாமில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு விலையில்லா இருசக்கர வாகனம் வழங்குவதற்கான மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கலந்து கொள்வதற்காக, ஓமலூர், மேட்டூர் தாலுக்காவிற்கு உட்பட்ட சுமார் 200- க்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்டவர்கள், இருசக்கர வாகனம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

காலை முதல் பிற்பகல் வரை நடைபெறவிருந்த முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறன் கொண்டவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.