ட்ரெண்டிங்

சிறப்பாக நடந்த அழகிரிநாதர் கோயில் தேரோட்டம்! 

பிரசித்திப் பெற்ற கோட்டை ஸ்ரீ அழகிரிநாதர் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

சேலம் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கோட்டை ஸ்ரீ அழகிரிநாதர் திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், கடைவீதியில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் இருந்து தொடங்கியது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, மஞ்சள் ஆடையை உடுத்தி ராஜ அலங்காரத்தில் அமர்ந்த படி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் பெருமாள். வழிநெடுக காத்திருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினர். 

கேரள செண்டை மேளம், பக்தர்களின் பக்தி இசை என ஆரவாரத்துடன் நடைபெற்ற தேரோட்டத்தால் சேலம் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பெண்கள் கோலாட்டம் ஆடி தேரை வரவேற்றனர். இது காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.