ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (செப்.28) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக, எடப்பாடியில் 4 செ.மீ. மழையும், எடப்பாடி, டேனிஷ்பேட்டையில் தலா 3 செ.மீ. மழையும், ஆத்தூர், கரியகோவில் அணை, ஏத்தாப்பூர் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ. மழையும், ஆனைமடுவு அணை, ஏற்காடு, சங்கரி துர்க்கம் ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.