ட்ரெண்டிங்

கொச்சுவேலி- டெல்லி ரயில் சேவை நீட்டிப்பு! 

கொச்சுவேலி- டெல்லி வாராந்திர ரயில் சேவையை நீட்டித்து, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக கொச்சுவேலி- டெல்லி வாராந்திர ரயில் சேவை இருமார்க்கத்திலும் வரும் மே மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள், கோட்டயம், எர்ணாகுளம், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, திருப்பதி, விஜயவாடா, நாக்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். 

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.