ட்ரெண்டிங்

"ஜூலை 22 முதல் பொறியியல் கலந்தாய்வு"- அமைச்சர் பொன்முடி பேட்டி!

"ஜூலை 22 முதல் பொறியியல் கலந்தாய்வு"- அமைச்சர் பொன்முடி பேட்டி! 

சென்னை கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் கலந்தாய்வு அட்டவணையை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி வெளியிட்டார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, "2023- 24 ஆம் ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22- ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஜூலை 22- ஆம் தேதி முதல் ஜூலை 26- ஆம் தேதி  வரை சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறவுள்ளது. பொதுக்கலந்தாய்வு ஜூலை 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9- ஆம் தேதி வரை நடைபெறும். 

இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 9- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 22- ஆம் தேதி வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28- ஆம் தேதி முதல் செப்டம்பர் 3- ஆம் தேதி வரையும் நடைபெறும். வரும் செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வுகள் முடிக்கப்படும். தமிழகத்தில் 430 பொறியியல் கல்லூரிகளில் 1.57 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 3,100 பொறியியல் இடங்கள் கூடுதலாக உள்ளன" எனத் தெரிவித்துள்ளார்.