ட்ரெண்டிங்

"காவிரி நீரைப் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை"- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

காவிரி நீரைப் பெற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்திற்கான காவிரி நீரை கர்நாடகாவிடம் பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. பெங்களூரு சென்றிருந்த போது காவிரி நீர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பேசவில்லை? 

விவசாயிகள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை; உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். நீட் தேர்வு ரத்துச் செய்யப்படும் என வாக்குறுதி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை நிறைவேற்றவில்லை. எங்களை போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திரானி இருக்கிறதா? நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு வாங்கியிருப்போம்.

நாங்குநேரியில் பட்டியல் சமூக மாணவர் தாக்கப்பட்டது வேதனை அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.