ட்ரெண்டிங்

மாணவர்களின் கவனத்திற்கு.... பெரியார் பல்கலைக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரியார் பல்கலைக்கழக இணையவழி மற்றும் தொலைநிலைக் கல்வி மையத்தில் (PUCODE) சேர்க்கை பெற்று இளநிலை, முதுநிலை மற்றும் பிற பாடப்பரிவுகளில் பயின்று அவர்களது படிப்புக்காலம் முடிந்து அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிலுவைத்தாள் வைத்துள்ள மாணாக்கர்கள் தங்களது நிலுவைத்தாள்களுக்குரிய தேர்வினை எழுதுவதற்காக சிறப்பு தேர்வு (Special Examinations) நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

 

அம்மாணவர்கள் பயின்ற பழைய பாடத்திட்டத்திலேயே நிலுவைத்தாள்களுக்குரிய தேர்வுகளை எழுதலாம். சிறப்புத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் கட்டணத்துடன் உறுப்புக்கட்டணமாக ஒவ்வொரு பாடத்தாளிற்கும் ரூபாய் 2,000 சேர்த்துச் செலுத்த வேண்டும்.

 

இத்தேர்விற்கான விண்ணப்பங்களை மாணாக்கர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு 25/10/2023 தேதி வரையிலும் மற்றும் பதிவுச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அச்செடுத்து பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பதற்கு 30/10/2023 தேதி வரையிலும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் பல்கலைக்கழக இணைய தளமான www.periyaruniversity.ac.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.