ட்ரெண்டிங்

சேலத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு!

 

கடந்த 2001- ஆம் ஆண்டு மே மாதம் சேலம் மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கார்மேகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிவது, வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு என பல்வேறு அதிரடி நடவடிக்கைளை எடுத்து வந்தார். 

 

இந்த சூழலில், தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், ஒரே மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்யுமாறு, தமிழ்நாடு அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

 

அதன்படி, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த கார்மேகத்தை, பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, இன்று (ஜன.29) காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக டாக்டர் பிருந்தா தேவி ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்தனர். 

 

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த கார்மேகம், கல்லூரி கல்வி இயக்குநராக சென்னையில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.