ட்ரெண்டிங்

அரசியல்வாதிகளின் உச்சிக்குடுமி அமலாக்கத்துறையின் கையில் உள்ளது- வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட

தமிழகத்தில் மறைமுகமாக ஆளுநர் ஆட்சி தான் நடக்கிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

 

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன், தமிழக அரசியல்வாதிகளின் உச்சிக்குடுமி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை கையில் உள்ளதால் அண்ணாமலை போன்றவர்கள் கொட்டமடிக்கின்றனர். சனாதனத்தைத் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பாடநூல் சனாதன கருத்து இடம் பெற்றுள்ளது.

 

ஆளுநர் மாதிரி ஆட்சியை தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

 

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.