ட்ரெண்டிங்

குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு ஆணையாளர் வேண்டுகோள்!

 

சேலம் மாநகராட்சியின் மேட்டூர் தொட்டில்பட்டி மற்றும் கோம்புரான்காடு பகுதிகளில் குடிநீர் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நான்கு நாட்களுக்கு குடிநீரை சிக்கனாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் இ.ஆ.ப. வேண்டுகோள் விடுத்துள்ளார்

 

இது தொடர்பாக, சேலம் மாநகராட்சி ஆணையாளர் சீ.பாலச்சந்தர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீர் திட்டம் செயல்படும் மேட்டூர் தொட்டில்பட்டி மற்றும் கோம்புரான்காடு ஆகியப்பகுதிகளில் புதிய மோட்டார் மற்றும் பம்புகள் தொடர் பராமரிப்பு பணிகள் போர்கால அடிப்படையில் இரவும், பகலுமாக நடைபெற்று வருகிறது.

 

மேலும் புதிய மோட்டார் மற்றும் பம்புகள் பொருத்துவதற்கு ரூபாய் 2 கோடியே 40 லட்சம் மதிப்பில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி பெறும் நிலையில் உள்ளது. இதனால் மேட்டூரிலிருந்து சேலத்திற்கு வரும் சராசரி குடிநீரின் அளவு சற்று குறைவாக வரப்பெறுகிறது. எனவே பொதுமக்கள் குடிநீரை தேவைக்கேற்ப நவம்பர் 04, 05, 06, 07 ஆகிய நான்கு நாட்களுக்கு குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.