ட்ரெண்டிங்

கழிவுநீர் கால்வாய் பணிகள் முழுமையடையவில்லை- சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

கழிவுநீர் கால்வாய் அமைத்துத் தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மூலக்கடைப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் முழுமைப் பெறாமல் இருப்பதால், தண்ணீர் தேங்கிச் சுகாதாரச் சீர்கேடு நிலவும் சூழல் உள்ளது. இதனைக் கண்டித்துப் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் விரைவில் முழுமைப் பெற மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, இந்த பிரச்சனைக்கு தீர்வுக் காணப்படும் என்று உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

இதனால் முத்துநாயக்கன்பட்டிக்கு செல்லும் பிரதான சாலையில் சில மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.