ட்ரெண்டிங்

திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் என்ற தலைப்பில் முதுநிலை பட்டயப் படிப்பு தொடங்கப்படும்-து

பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் எனும் பட்டயப் படிப்புகள் மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பு தொடங்கப்படும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.

 

பெரியார் பல்கலைக்கழக தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி இருக்கை, பேரறிஞர் அண்ணா இருக்கை, முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தந்தை பெரியார் பிறந்த நாள்,சமூகநீதி நாள், பல்கலைக்கழக 27-வது ஆண்டு நிறுவன நாள் விழா இன்று (செப்.15) காலை 10.00 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது.

 

விழாவில் பேசிய பல்கலைக்கழக துணைவேந்தரும், பேராசிரியருமான ஜெகநாதன், 27- வது ஆண்டில் பெரியார் பல்கலைக்கழகம் அடியெடுத்து வைக்கிறது. அறிவால் விளையும் உலகினை சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆய்வு மையத்திற்கான பிரத்யேக கட்டடம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் என்ற தலைப்பில் முதுநிலை பட்டயப் படிப்பு, அடுத்த கல்வியாண்டில் இருந்து தொடங்கப்படும்.

 

தமிழ் அல்லது இதழியலில் இளநிலை பாடம் படித்தவர்களும், இதே துறையில் முதுநிலை பாடங்கள் பயின்று வருபவர்கள் இதில் சேர்ந்து பயிலலாம். இதேபோன்று திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் என்ற தலைப்பில் பகுதி நேர முனைவர் பட்ட ஆராய்ச்சிப் படிப்பு தொடங்கப்படும். இதில் பணியில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.