ட்ரெண்டிங்

அமித்ஷாவைக் கண்டித்து சேலத்தில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்! 

அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து இன்று (டிச.19) காலை 11.30 மணிக்கு சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, அம்மாப்பேட்டை, ஆத்தூர், காடையாம்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வங்கிகள் முன்பு தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறிப்பாக, தி.மு.க.வின் சேலம் மத்திய மாவட்டம் சார்பில் காந்திரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஜங்சன் ரயில் நிலையத்தை வி.சி.க.வினர் முற்றுகையிட முயன்ற போது, காவல்துறையினர் தடுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.