ட்ரெண்டிங்

தடுப்புச் சுவர்கள் உடைந்து விழும் நிலையில் உள்ள சிற்றோடைப் பாலம்!

ஆத்தூரில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் சிற்றோடைப் பாலத்தின் தடுப்புச் சுவர்கள் உடைந்து விழுந்தன. 

சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து காமராஜ் நகர் சாலை வழியாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை உள்ளிட்டப் பல்வேறு மாவட்டங்களுக்கு நாள்தோறும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள், லாரிகள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். 

மந்தைவெளி பகுதியில் இச்சாலை வழியே செல்லும் சிற்றோடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த பாலத்தில் இருபுறங்களில் உள்ள கைப்பிடி சுவர்களும் பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே வந்துள்ளன. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் தடுப்புகளின் பின்புறம் 10 அடி தூரம் உடைந்து விழுந்து காணப்படுகிற நிலையில், மற்ற தடுப்புகளும் உடைந்து விழும் நிலையில் உள்ளன. எனவே பாலத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், சாலை விரிவாகப் பணிகள் முடிவுற்றவுடன், மாநில நெடுஞ்சாலைத் துறையிடம், இந்த சாலை ஒப்படைத்த பிறகே, அவர்கள் நடவடிக்கை எடுப்பர் எனத் தெரிவித்துள்ளனர்.