ட்ரெண்டிங்

குட்கா போதைப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை விற்பனை செய்ததாக, ஓமலூர் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த 8 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். 

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தின் உத்தரவுப்படி, சேலம் மாவட்டம், ஓமலூர் நகரம், தாராபுரம், முத்துநாயக்கன்பட்டி, எம்.செட்டிப்பட்டி, உள்ளிட்டக் கிராமங்களில் உள்ள கடைகளில் சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 
 
அதில், தமிழக அரசால் தடைச் செய்யப்பட்ட குட்கா போதைப்பொருட்களை விற்பனைச் செய்து வந்த 8 கடைகளுக்கு அதிரடியாக அதிகாரிகள் சீல் வைத்தனர். அத்துடன், கடைகளின் உரிமத்தையும் அதிகாரிகள் ரத்துச் செய்தனர். 

மேலும், கடைகளில் இருந்த குட்கா உள்ளிட்டப் போதைப்பொருட்களையும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.