ட்ரெண்டிங்

இன்ஸ்பயர் விருது உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

இன்ஸ்பயர் விருது உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு!

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் பள்ளி மாணவ, மாணவியர் இடையே அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க, ஆண்டுதோறும், இன்ஸ்பயர் விருது வழங்கப்படுகிறது, இதற்கு நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் ஒரு லட்சம், ஐடியாக்கள் தேர்வுச் செய்யப்பட்டு, 10,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதைக் கொண்டு, அறிவியல் கண்டுபிடிப்புகளை மாவட்ட, மாநில, தேசிய அளவில் நடத்தப்படும் கண்காட்சிகளில் பங்கேற்க செய்து சிறந்த படைப்புக்கு விருது வழங்கப்படுகிறது. 

நடப்பு கல்வியாண்டு, இன்ஸ்பயர் விருது உதவித்தொகை விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வந்தன. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களும், இதில் பங்கேற்க செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த விண்ணப்பக் கால அவகாசம், வரும் செப்டம்பர் 31- ஆம் தேதி வரை நீட்டித்து, அறிவியல், தொழில்நுட்ப இயக்குநரகம் அறிவித்துள்ளது.