ட்ரெண்டிங்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் நிகழ்ச்சி நிரல் குறித்த விரிவான தகவல்!

 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (பிப்.12) காலை 10.00 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வரும் பிப்ரவரி 22- ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதன்படி, பிப்ரவரி 13- ஆம் தேதி மறைந்த தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமும், பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும், பிப்ரவ்ரு 16, 17, 18 ஆகிய தேதிகளில் விடுமுறை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

பிப்ரவரி 19- ஆம் தேதி 2023- 2024 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டும், பிப்ரவரி 20- ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெறவுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.