ட்ரெண்டிங்

சேலத்தில் சுங்கச்சாவடிகளில் அமலுக்கு வந்தது கட்டண உயர்வு! - முழு விவரம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வீரசோழபுரம் ஆகிய மூன்று சுங்கச்சாவடிகளிலும் நேற்று (ஆகஸ்ட் 31) நள்ளிரவு 12.00 மணி முதல் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுங்கக்கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்! 

அதன்படி, கார், வேன், ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை ஒருமுறை கடந்துச் செல்ல 60 ரூபாயில் இருந்து 65 ரூபாயாகவும், ஒரே நாளில் சுங்கச்சாவடியைப் பலமுறைக் கடந்துச் செல்ல 90 ரூபாயில் இருந்து 95 ரூபாயாகவும், மாதக் கட்டணம் 1,780 ரூபாயில் இருந்து 1,945 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

இலகு ரக வாகனங்கள் சுங்கச்சாவடியை ஒருமுறை கடந்துச் செல்ல 105 ரூபாயில் இருந்து 115 ரூபாயாகவும், ஒரே நாளில் சுங்கச்சாவடியைப் பலமுறைக் கடந்துச் செல்ல 155 ரூபாயில் இருந்து 170 ரூபாயாகவும், மாதக் கட்டணம் 3,110 ரூபாயில் இருந்து 3,405 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேபோல், டிரக், பேருந்துகள் சுங்கச்சாவடியை ஒருமுறை கடந்துச் செல்ல 205 ரூபாயில் இருந்து 225 ரூபாயாகவும், சுங்கச்சாவடியைப் பலமுறை கடந்துச் செல்ல 310 ரூபாயில் இருந்து, 340 ரூபாயாகவும், மாதக் கட்டணம் 6,225 ரூபாயில் இருந்து, 6,810 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.