ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் தீபத் தீர்ப்பு – சேலத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் கொண்டாட்டம்!

 

சேலம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி – சேலத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சிறப்பு பூஜை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்ட நாட்களாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், வரும் நவம்பர் 24ஆம் தேதி மட்டும் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதேவேளையில், தீபம் ஏற்றும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்றும், அங்கு கோஷமிடவோ, கும்பலாகக் கூடவோ அனுமதி கிடையாது என்றும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தூண் பகுதிக்குச் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று வரும் நிலையில், சேலத்திலும் இதனை வரவேற்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.