ஆன்மிகம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு கோலாகல குடமுழுக்கு – பக்தர்கள் பரவசம்!

 

சேலம்

12 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்ட ஜங்ஷன் மாரியம்மன் காளியம்மன் கோவில் – கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழா!

சேலம் ஜங்ஷன் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, புனித நீர் கொண்டு கோவில் கோபுரக் கலசங்களுக்கு அபிஷேகம் செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பக்திப் பரவசத்துடன் பங்கேற்று அம்மனுக்கு புனித நீர் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.

இதில் அம்மன் வேடமணிந்த பெண் நடனமாடியபடி ஊர்வலத்தில் சென்றது பக்தர்களையும், அப்பகுதி மக்களையும் வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த புனித நீரால் மாரியம்மன், காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.