ட்ரெண்டிங்

இன்னும் 6 மாதத்தில் திமுக ஆட்சி” – ஆர்.எஸ்.பாரதி

 

“கூட்டணியில் இருந்த ஏழரை நாட்டு சனியன்கள் ஒளிந்து விட்டனர்” – ஆர்.எஸ்.பாரதி பேச்சு!

சேலம்: “கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் திமுகவே போட்டியிட்டிருந்தால், மேலும் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தாதகாப்பட்டி கேட் பகுதியில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

அப்போது, இடைத்தேர்தல்களில் திமுக தொண்டர்கள் தங்களது வலிமையை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும், “கூட்டணியில் இருந்த ஏழரை நாட்டு சனியன்கள் ஒளிந்து விட்டனர்” எனக் குறிப்பிட்டு, இனி வரும் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் உற்சாகத்துடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

திமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து பேசிய அவர், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளைச் சுட்டிக்காட்டி, மக்கள் அரசின் சாதனைகளை உணரத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இன்னும் ஆறு மாத காலத்தில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.