பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) கொண்டாடப்படவுள்ள நிலையில், சேலம் கடைவீதி, பட்டைக்கோவில், அம்மாப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி, குகை, அஸ்தம்பட்டி, ஏற்காடு மெயின் ரோடு, செவ்வாய்ப்பேட்டை, பால்மார்க்கெட், வ.உ.சி. மார்க்கெட், ஆனந்தா, கொண்டலாம்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் இவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். சேலத்தில் பல இடங்களில் கலர் கோலப்பொடி விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜோடி கரும்பு ரூபாய் 50 முதல் ரூபாய் 80 வரையும், ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூபாய் 50 முதல் ரூபாய் 80 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
பொங்கல் பானைகள் ரூபாய் 100 முதல் ரூபாய் 500 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மார்க்கெட்டுகளில் காய்கறிகள், பழங்களை வாங்க கூட்டம் அலைமோதியது. விற்பனை அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


-SXgDfGgJfO.jpg)