ஆன்மிகம்

மாரியம்மன் கோயிலில் நகைகள் திருட்டு!

சேலம் மாவட்டம், மாட்டுக்காரனூர் கிராமத்தில் நகைகள் திருடிய இரண்டு பேர் பிடிபட்டனர். 

கடந்த ஜூலை மாதம், சேலம் மாவட்டம், கருப்பூரை அடுத்த மாட்டுக்காரனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று, சுவாமி நகைகள், விலையுயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றது. இது தொடர்பாக, வழக்குப்பதிவுச் செய்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர், காமலாபுரத்தைச் சேர்ந்த விஸ்வா, பொட்டியப்புரத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகியோரை கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து திருடிய பொருட்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், திருடில் ஈடுபட்ட மேலும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.