ட்ரெண்டிங்

பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 14-ல் ரிசல்ட்! 

பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 14- ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இது அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், வரும் மே 14- ஆம் தேதி காலை 09.30 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்படும். 

www.dge.tn.nic.in, www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். பிளஸ் 1 மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள் உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணிற்கும் முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.