ட்ரெண்டிங்

தமிழக அமைச்சரவையில் யாருக்கு கிடைக்கும் முக்கிய இலாகாக்கள்?”

 

 

 தமிழக அமைச்சரவையில் இன்னும் காலியாக உள்ள 25 இடங்கள்... கூட்டணி கட்சிகளுக்கும் வாய்ப்பு!* 

 

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது. தற்போது முதல்-அமைச்சர் விஜய் உட்பட 10 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுள்ளதால், இன்னும் 25 பேருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

 

நேற்று வெளியிடப்பட்ட இலாகா ஒதுக்கீட்டில் காவல்துறை, நிதி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும், வேளாண்மை, வருவாய், போக்குவரத்து, சுற்றுலா, சமூக நலன், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் இன்னும் ஒதுக்கப்படாமல் உள்ளன.

 

இதனால் அடுத்த கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 2 இடங்கள் வழங்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அடுத்த சில நாட்களில் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு கிளம்பியுள்ளது.