வைகுண்ட ஏகாதேசியில் முன்னிட்டு சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது....
ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே காத்திருந்து பரமபத வாசல் வழியே வந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்
தமிழக முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் சிறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும் இந்த சேலத்தில் புகழ்பெற்ற பெற்ற கோட்டை அழகிரிநாதர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கும். அதன்படி,நடப்பாண்டு சொர்க்க வாசல் திறப்பு விழாவை முன்னிட்டு கடந்த 19ம் தேதி முதல் 29ம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடைபெற்றது .
பகல்பத்து உற்சவத்தின் போது தினசரி மாலை 6 மணிக்கு அழகிரிநாத சுவாமி திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளல்,திரு மொழி வேதபாராயணம் சேவித்தல், திருவாராத னம், தீபாராதனை, தீர்த்த பிரசாதம், திருக்கொட்டா ரத்தில் பக்தி உலாவுதல், ஆஸ்தானம் எழுந்தருளல் நடைபெற்ற நிலையில்.
30ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை இராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது இந்த நிலையில் கோட்டை அழகிரிநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது
பரமபதில் வாசல் திறப்பின் போது கோவிந்தா கோவிந்தா என பக்தர்கள் விண்ணை பிளக்க முழக்கமிட்டபடி பக்தி பரவசமடைந்தனர்.இதில் அதிகாலை முதலே காத்திருந்த பக்தர்கள் பரமபத வாசல் வழியே நுழைந்து கோட்டை அழகிரி நாதரை தரிசனம் மேற்கொண்டனர்...
இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ,சேலம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் மற்றும் மாநகராட்சி மேயர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்..


