பயணிகளின் வசதிக்காக, கோவை – ராமேஸ்வரம் இடையே இயக்கப்படும் முன்பதிவு இல்லாத (Unreserved) சிறப்பு ரயில்களுக்கு கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ரயில் எண் 06123 – கோவை – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் :
29.12.2025 அன்று இரவு 7.15 மணிக்கு கோவை ஜங்ஷனில் இருந்து புறப்படும் இந்த ரயில்,இரவு 7.45 / 7.46 மணிக்கு கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நிறுத்தம் செய்யும்.ரயில் எண் 06124 – ராமேஸ்வரம் – கோவை சிறப்பு ரயில் : 30.12.2025 அன்று இரவு 10.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில்,31.12.2025 அன்று அதிகாலை 5.21 / 5.22 மணிக்கு கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படும்.
இந்த கூடுதல் நிறுத்தம் மூலம் கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டார பகுதி பயணிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


-SXgDfGgJfO.jpg)