ட்ரெண்டிங்

விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண்- அரசாணை வெளியீடு!

 

10- ஆம் வகுப்பில் விருப்பப் பாடத்திற்கும் தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயித்து தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.

 

அதன்படி, தமிழ், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்கள் விருப்பப் பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும். விருப்பப் பாடத்திற்கு தேர்ச்சி மதிப்பெண் 35 ஆக நிர்ணயித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் அமலாகும் வகையில் தமிழ்நாடு கற்றல் சட்டம்- 2006- ல் திருத்தம் செய்து அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது.

 

உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற விருப்பப் பாடங்களில் பெறும் மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும். தமிழ் தாய்மொழியாக உள்ள விருப்பப் பாடம் தேர்வு செய்யாத மாணவர்கள் 5 பாடத்திலும் தேர்ச்சி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.