ட்ரெண்டிங்

சேலத்தில் 2-வது நாளாக செவிலியர்கள் – பணி நிரந்தரம் கோரி ஆர்ப்பாட்டம் !

 

தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த முன்தினம் முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், நேற்று மதியம் மருத்துவமனை நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.