ட்ரெண்டிங்

ஜல் ஜீவன் திட்டம்- தேசிய அளவில் சேலம் முதலிடம்! 

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 2023- ம் ஆண்டிற்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றமைக்கான ஜல் ஜீவன் சர்வேக்ஷான் பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. நேற்று (ஜூன் 13) வழங்கினார்.

கடந்த 2022-2023-ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தில் ஊரக குடிநீர் இயக்கம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 1,419 எண்ணிக்கையிலான பணிகள் மூலம் ரூபாய் 149.92 கோடி செலவினம் மேற்கொண்டு 1,76,808 இல்லங்களுக்கு தனித்தனி குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 2022 முதல் ஜூன் 2023 வரையிலான காலத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தி தேசிய அளவில் முதலிடம் பெற்றமைக்காக ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் ஜல் ஜீவன் சர்வேக்ஷான் பாராட்டுச் சான்றிதழை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. நேற்றைய தினம் (ஜூன் 13) சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவியிடம் நேரில் வழங்கினார்.