ட்ரெண்டிங்

23-வது சர்வதேச திரைப்பட விழா !!!

 

11-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 51 நாடுகளில் இருந்து படங்கள் திரையிடப்படுகின்றன..

23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, வருகிற 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது. இதனை தமிழக அரசு மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன் இந்தோசினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்துகிறது.

இதுகுறித்து அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன்,துணைத்தலைவர் ஆனந்த் ரங்க சாமி,பொதுச்செயலாளர் தங்கராஜ் ஆகியோர் கூறும்போது, "8 நாட்கள் நடைபெறும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் சென்னை சத்யம் தியேட்டரில் திரையிடப்படு கின்றன. இதில் ஆஸ்கார்,கேன்ஸ் மற்றும் பெர்லின் பட விழாக்களுக்கு பரிந்துரைக்கப் பட்ட திரைப்படங்களும் இடம்பெறுகின்றன.

இதில் தமிழில் இருந்து 3 பி.எச்.கே.,அலங்கு,பிடிமண்,காதல் என்பது பொதுவுடைமை,மாமன்,மாயக்கூத்து, மெட்ராஸ் மேட்னி,மருதம்,ஒன்ஸ் அபான் அ டைம் இன் மெட்ராஸ்,பறந்து போ,டூரிஸ்ட் பேமிலி,வேம்பு ஆகிய 12 படங்கள் இடம்பெற்றுள்ளன.இதர இந்திய மொழி படங்களுடன் ரஷியா,ஜெர்மன்,பிரெஞ்சு,தைவான் மொழி படங்களும் திரையிடப்படுகின்றன,ரஜினிகாந்தின் 50 ஆண்டு சினிமா பயணத்தை போற்றும் வகையில் அவரது பாட்ஷா படமும் திரையி டப்படுகிறது.இந்த விழாவில் 13 விருதுகளை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.