ட்ரெண்டிங்

Windows மென்பொருள் முடங்கியதால் பாதிப்பு! 

உலகின் பல்வேறு பகுதிகளில் Windows மென்பொருள் முடங்கியுள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. Windows முடங்கியதால் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. CrowdStrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. 

தொழில்நுட்பம், பொருளாதாரம், தொலைத்தொடர்பு சேவைகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் Blue Screen Error ஏற்பட்டுள்ளதால் பயனாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் 30 கோடி பயனாளர்கள் மைக்ரோசாஃப்டின் Windows- ஐ பயன்படுத்தி வருகின்றனர். 

Windows முடக்கம்- இணையத்தில் பறக்கும் மீம்ஸ்! 

Windows முடங்கியுள்ள நிலையில் இணையத்தில் பல்வேறு மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை அன்று சாஃப்ட்வேர் முடங்கியுள்ளதால் சீக்கிரமே Weekend தொடங்கியதாக மீம்ஸ்.