ட்ரெண்டிங்

சேலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம் !

 

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின் படி, சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதையொட்டி,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். இரா.பிருந்தாதேவி,தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. 

 

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்,தெரிவித்ததாவது:

 

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள,கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் 264 வாக்குச்சாவடிகளில் 1,13,762 ஆண் வாக்காளர்களும், 120.383 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 234,154 வாக்காளர்களும், 

 

ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளில் 118,749ஆண் வாக்காளர்களும், 1.26,882 பெண் வாக்காளர்களும், 24 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 245,655 வாக்காளர்களும்.

 

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் 318 வாக்குச்சாவடிகளில் 140,088 ஆண் வாக்காளர்களும். 147,537 பெண் வாக்காளர்களும், 17 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,87,642 வாக்காளர்களும்,

 

ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 346 வாக்குச்சாவடிகளில் 1.55,878 ஆண் வாக்காளர்களும், 1,50,232 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 3,06,130 வாக்காளர்களும், 

 

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 316 வாக்குச்சாவடிகளில் 1,41,839 ஆண் வாக்காளர்களும், 140,270 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 282,129 வாக்காளர்களும்,

 

எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 325 வாக்குச்சாவடிகளில் 1,48,104 ஆண் வாக்காளர்களும், 1.45,617 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,93,749 வாக்காளர்களும்,

 

சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 315 வாக்குச்சாவடிகளில் 1,38,657 ஆண் வாக்காளர்களும், 137,219 பெண் வாக்காளர்களும், 25 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,75,901 வாக்காளர்களும், 

 

சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 296 வாக்குச்சாவடிகளில் 1.53.224 ஆண் வாக்காளர்களும். 155,581 பெண் வாக்காளர்களும், 87 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 3,08,892 வாக்காளர்களும், 

 

சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் 262 வாக்குச்சாவடிகளில் 133,003 ஆண் வாக்காளர்களும், 1,40,915 பெண் வாக்காளர்களும், 53 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,73,971 வாக்காளர்களும்,

 

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 239 வாக்குச்சாவடிகளில் 1,24,752 ஆண் வாக்காளர்களும். 1,31351 பெண் வாக்காளர்களும், 63 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2,56166 வாக்காளர்களும், 

 

வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளில் 133,040 ஆண் வாக்காளர்களும், 133,088 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2.66.148 வாக்காளர்களும் என மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகளில் 3,264 வாக்குச்சாவடிகளில் 15,01098 ஆண் வாக்காளர்களும், 15,29,075 பெண் வாக்காளர்களும், 366 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 30,30,537 வாக்காளர்களும் உள்ளனர்.

 

இந்திய அரசியலமைப்பின் 324-வது பிரிவு மற்றும் 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 21 மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-ன் பிற பொருந்தக்கூடிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி 01.012026 ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதன்படி முன்னேற்பாடுகள் பயிற்சி/அச்சடித்தல் 28.10.2025 (செவ்வாய் முதல் 03.112025 (திங்கள்) வரையிலும், கணக்கீட்டிற்கான காலம் 04112025 (செவ்வாய்) முதல் 04.12.2025 (வியாழன்) வரையிலும், வாக்குச்சாவடி நிலையங்களை மறுசீரமைத்தல்/ திருத்தியமைத்தல் 04.122025(வியாழன்) க்குள்ளும்,கட்டுப்பாட்டு அட்டவணையை (Control Table) மேம்படுத்துதல் மற்றும் வரைவுப் பட்டியலைத் தயாரித்தல் 05.12.2025 (வெள்ளி) முதல் 08:12.2025 (திங்கள்) வரையிலும்,வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 09:12.2025 (செவ்வாய்) அன்றும்,

ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கும் காலம் 09.12.2025 (செவ்வாய்) முதல் 08.01.2026 (வியாழன்) வரையிலும், அறிவிப்பு கட்டம் (வழங்கல், விசாரணை மற்றும் சரிபார்ப்பு) கணக்கீட்டு படிவங்கள் மீதான முடிவுகள் மேற்கொள்ளுதல் மற்றும் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு காணுதல் ஆகியவை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, இவை அனைத்தும் வாக்காளர் பதிவு அலுவலரால் முடிக்கப்பட வேண்டிய தேதி 08:122025 (செவ்வாய்) முதல் 31.01.2026 (சனி) வரையிலும், இறுதி வாக்காளர் பட்டியலின் தர அளவுகளை சரிபார்த்தல் மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் ஒப்புதலைப் பெறுதல் 03.02.2026 (செவ்வாய்)-க்குள்ளும், இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 (சனிக்கிழமை) அன்று வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

 

மேற்படி இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ள சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமனம் செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் மேற்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு நல்குமாறும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர் அளிக்கும் கணக்கீட்டுத்தாள் படிவத்தில் தங்கள் பெயர் 2002/2005 ஆம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த விவரத்தினை சரிபார்த்து, பூர்த்தி செய்து படிவங்களில் கையொப்பமிட்டு அவரிடம் வழங்க வேண்டும்.

இதற்கான 2002-ஆம் ஆண்டு பட்டியல் மற்றும் 2005-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் எளிதில் தங்கள் பெயர் விவரங்களை சரிபார்க்கும் விதமாக voters.ecigov.in στοότπ இணையத்தில் புதிய வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி வாக்காளர்களாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட BLO-க்களிடம் படிவம் 6-ஐ நேரடியாகவும் வழங்கலாம். பொதுமக்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரையோ (BLO) அல்லது வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தீவிர திருத்தம் சிறப்பு உதவி மையத்தினை 1950-என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரத்தினை தெரிந்து கொள்ளலாம். என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி. இ.ஆ.ப,தெரிவித்துள்ளார்.