ஈரை பேனாக்கும் வேலையைச் செய்பவர்களுக்கு நம்மை பாராட்டுவதற்கு மனமில்லை என்று தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரை பேனாக்கும் வேலையைச் செய்பவர்களுக்கு நம்மை பாராட்டுவதற்கு மனமில்லை; எந்த பிரச்சனை என்றாலும் கவனம் செலுத்தி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எந்த விவகாரத்திலாவது அரசு செயல்படாமல் இருந்திருக்கிறதா?; நாள்தோறும் செயல்பட்டு கொண்டே இருக்கிறோம்.
பொய் செய்திகளை பரப்பி அதில் குளிர்காய நினைக்கும் மக்கள் விரோத சக்திகளின் அஜன்டா பலிக்காது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வரப்பிரசாதம். தமிழகம் தொடங்கி வைத்த காலை உணவுத் திட்டம் கனடா நாட்டில் கூட அமலுக்கு வந்துள்ளது. காலை உணவுத் திட்டத்தில் பரிமாறப்படும் உணவின் தரம் ஒரு துளி கூட குறையக் கூடாது. காலை உணவுத் திட்டம் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் திடீர் ஆய்வுப் பணிகளை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.



-SXgDfGgJfO.jpg)