ஜனவரி 23- ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி 28- ம் தேதி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்க ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு முதலமைச்சர் செல்லவுள்ளார்.
இந்த நிலையில், வரும் ஜனவரி 23- ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
தமிழக சட்டப்பேரவையைக் கூட்டுவது, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கவுள்ளார்.
முன்னதாக, வரும் ஜனவரி 21- ஆம் தேதி சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



