ட்ரெண்டிங்

வாக்குச்சாவடி மையத்திற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடு! 

மக்களவை பொதுத்தேர்தலில் மூத்த குடிமக்கள், பார்வை மற்றும் இயக்க குறைபாடு, பலவீனமான இயக்கம் கொண்டவர்கள் தேர்தல் நாளில் வாக்களிப்பதற்கு அவர்களது இருப்பிடத்தில் இருந்து வாக்குச்சாவடி செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, 2024 மக்களவை பொதுத்தேர்தலில் மூத்த குடிமக்கள் (Senior Citizens). பார்வை (Visual) மற்றும் இயக்க குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் (Locomotive disabilities), பலவீனமான இயக்கம் கொண்ட வாக்காளர்கள் (Impaired Movement) தேர்தல் நாளில் வாக்களிப்பதற்கு அவர்களது இருப்பிடத்தில் இருந்து வாக்கு சாவடி செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து இந்திய தேர்தல் ஆணையத்தால் வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் (Senior Citizens), பார்வை (Visual) மற்றும் இயக்க குறைபாடு (Locomotive disabilities), பலவீனமான இயக்கம் கொண்டவர்கள் (Impaired Movement) வாக்களிக்கும் நாளில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். பொதுப் போக்குவரத்து வசதி இல்லை என்றால். அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும், இறக்கவும் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள வாக்காளர்கள் இந்த வசதிகளைப் பெறுவதற்கு எதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சக்க்ஷம் இசிஐ ஆப் (SAKSHAM ECI APP) அல்லது ஹெல்ப்லைனில் (1950) (HELP LINE) பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள இவ்வசதிகளை தகுதியுள்ள வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.