சேலம் ஆன்லைன் மருந்து விற்பனையைதடை செய்ய வலியுறுத்தி மருந்து கடைகள் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் ....
சேலம் மாவட்டத்தில் 4000 மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது ....
ஆன்லைன் மருந்து விற்பனையில் பல்வேறு போலி மருந்துகள் மற்றும் போலியான மருந்து சீட்டுக்கும் மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு...
ஆன்லைனில் மருந்து விற்பனை ஆதிகத்தை கண்டித்து நாடு முழுவதும் மருந்து கடைகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் தமிழகத்தில் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து கடைகள் இன்று ஒரு நாள் அடைக்கப்பட்டு தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
சேலம் மாவட்டத்தில் மாநகரப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகள் என 4000 க்கும் மேற்பட்ட மருந்து கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனையை உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் நான்காயத்திற்கு மேற்பட்ட மருந்து கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம் குறித்து மருந்து வணிகர்கள் சங்கத்தினர் கூறுகையில்:-
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை மத்திய அரசு உடனடியாக தடுக்க வேண்டும் இந்த ஆன்லைன் மருந்து விற்பனையால் போலி மருந்து விற்பனை அதிகரித்துள்ளது அதேபோல தள்ளுபடி என்ற பெயரில் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தரமற்ற மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல மருத்துவர் பரிந்துரைத்த சீட்டுகள் இல்லாமலேயே போலியாக அதற்காக மருத்துவர் சீட்டுகள் உருவாக்கி வலி நிவாரணிமாத்திரைகளை வாங்கி இளைஞர்கள் தவறான வழிக்கு பயன்படுத்தி வருகின்றனர் இதனை எல்லாம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.



