ட்ரெண்டிங்

சேலத்தில் 2.5 கோடி நில மோசடி – இருவர் கைது !

 

சேலத்தில் குறைந்த விலையில் நிலம் வாங்கித் தருவதாக இரண்டரை கோடி ரூபாய் மோசடி.....

 

போலியாக தயாரிக்கப்பட்ட பத்திர ஆவணங்களில், போலி கையெழுத்து போட்ட இருவரை அதிரடியாக கைது செய்த சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை...

சேலம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கித் தருவதாக,போலி ஆவணங்களை தயார் செய்து,நிலத்தின் உரிமையாளரின் கையெழுத்தை போலியாக போட்டு 2.50 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டு நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி, ராஜமாணிக்கம், பச்சமுத்து ஆகிய இருவர் மீது எட்டு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நடவடிக்கையை சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மேற்கொண்டு உள்ளனர்.