ஆன்மிகம்

சேலம் பூம்புகார்- தீபத் திருவிழா சிறப்பு கண்காட்சி !!!

 

சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் வருகின்ற திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு தீபத் திருவிழா என்ற சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது. 

சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் 18.11.25 முதல் 06.12.25 வரை இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.

சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் திருக்கார்த்திகை பண்டிகை முன்னிட்டு சிறப்பு தீபத் திருவிழா கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.இக்கண்காட்சியை மதிப்பிற்குரிய மத்திய அரசின் அபிவிருத்தி ஆணையம் (கைவினைப்பொருட்கள்) ,உதவி இயக்குநர் திருமதி.. டி.ஜி.நீதா கண்காட்சியை திறந்து வைத்து சிறப்பித்தார்.

இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக அனைத்து வகை விளக்குகள் இடம் பெற்றுள்ளன.கண்காட்சியில் பூம்புகார் உற்பத்தி நிலையங்கள் கும்பகோணம், நாச்சியார் கோயில்,மதுரை,வாகை குளம் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்ட 1/2 அடி முதல் 6 அடி வரையில் அன்னம் மற்றும் பிரபை விளக்குகள்,1/2 அடி முதல் 3 அடி வரையில் மலபார் விளக்குகள் , ஆலயங்களில் பயன்படுத்தக்கூடிய வாசமாலை,அகல் விளக்குகள்,மங்கள தீபம்,பாலாடை விளக்குகள்,விநாயகர் விளக்குகள்,கிளை விளக்குகள்,அடுக்கு தீபம்,பஞ்சாட்சர தீபம்,திருமலை அன்னம் மற்றும் சங்கு சக்கர தீபம்,லட்சுமி , பாலாஜி,தேவி,விஷ்ணு,முருகர்,நவகிரக தீபங்கள்,அஷ்டோத்ர தீபம்,பிரபை விளக்குகள்,கிளி விளக்குகள்,தாமரை விளக்குகள்,அஷ்டலட்சுமி விளக்குகள், பிரதோஷ விளக்குகள்,நாக தீபம்,குபேர தீபம்,நந்தா தீபம்,கற்பகவிருட்சம் விளக்கு, ஊஞ்சல் விநாயகர் உருவம் கொண்ட உருளி,பலவித வடிவங்களில் உருளி, தென்கலை நாம விளக்கு, அருணாச்சலேஸ்வரர் விளக்கு,தாமரை அகல் விளக்குகள்,ஏழு முக விளக்கு, கண்ணாடி கூண்டு விளக்கு,டெரகோட்டா அகல் மண் விளக்குகள்,வர்ணம் பூசப்பட்ட மண் விளக்குகள் மற்றும் பலவித வடிவங்களில் விளக்குகள்,பலவகை விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.மேலும் 10 % சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்த கண்காட்சியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.