சேலம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்தனூர்பட்டி, காட்டுவேப்பிலைப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது வரும் S I R பணிகள் ஆட்சியர் ஆய்வு...
சேலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்யப்பட்டதை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெறப்பட்டு வரும் பணிகளை சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி. இன்று (18.11.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
ஆய்விற்கு பின் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது :-
சேலம் மாவட்டம், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்தனூர்பட்டி மற்றும் காட்டுவேப்பிலைப்பட்டி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பெற்று வரும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தொடர்புடைய வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களில் நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்களின் விவரங்களை அறிந்து கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும்,வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்த கணக்கீட்டுப் படிவங்களை பெற வரும் தேதியினை முன்கூட்டியே வாக்காளர்களுக்கு தெரியப்படுத்தி அனைத்து வாக்காளர்களிடமிருந்தும் கணக்கீட்டுப் படிவங்கள் பெறுவதை உறுதி செய்திடவும் இந்த ஆய்வின் போது அறிவுறுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த உதவி மையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்,இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப.தெரிவித்தார்.



-hcTFAGMRGb.jpg)